நிவர் புயல் முன்னெச்சரிக்கை எதிரொலி: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்து சேவை ரத்து: மறுஉத்தரவு வரும் வரை ஆம்னி பேருந்து இயங்காது

சென்னை: நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துக்கள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஆம்னி பஸ் சேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியே பிற மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துக்கள் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 1 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>