×

நிவர் புயல்: புதுச்சேரி, காரைக்காலில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்; காரைக்கால், நாகையில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: நிவர் புயல் நெருங்கி வரும் நிலையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால், நாகையில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில்  பொதுமக்கள், மீனவர்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. துறைமுகம் வழியாகவோ அல்லது அதன் அருகிலோ புயல் கரையை கடக்கலாம் என்பதே 7ம் கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக மாறியது. தமிழக கடலோர பகுதியில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. சென்னைக்கு அருகே 470 கி.மீ தொலையிலும், புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது.

நிவர் புயலுக்கு மேற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கரையை நெருங்கி வருகிறது. புயல் கரையை நோக்கி மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புயல் நாளை கரையை கடக்க உள்ளது. சென்னை, திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 24 மணி நேரத்தில் மின கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலை 7 மணி நிலவரப்படி 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.


Tags : storm ,Karaikal ,Puducherry ,Nivar ,Nagai , Nivar Puyal, Pondicherry, Karaikal No. 7, Karaikal, Nagai, No. 5
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...