×

இன்று மட்டும் 37,975 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 91.77 லட்சத்தை தாண்டியது; 4.78% பேர் சிகிச்சை.!!!'

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.34 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 91.77 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக   பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 37,975 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,77,840 ஆக உயர்ந்தது.

* புதிதாக 480 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,34,218 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 86,04,955 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,38,667 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 93.76 % ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.78% ஆக குறைந்துள்ளது.

Tags : India ,Corona , Today only 37,975 people are affected: Corona infection in India exceeds 91.77 lakhs; 4.78% treated !!!
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...