×

கொரோனா பரிசோதனைக்கு பின் புறநகர் மின்சார ரயில்களில் பெண்கள் உற்சாக பயணம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருந்து நேற்று காலை 10 மணியளவில் புறப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பெண்கள் உற்சாகமாகப் பயணம் செய்தனர். முன்னதாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
சென்னை புறநகர் பகுதி மின்சார ரயில்களில் பெண்கள் பயணிக்கலாம் என நேற்று முன்தினம் தெற்கு ரயில்வே அறிவித்தது. இதை தொடர்ந்து, நேற்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பயணம் செய்தனர். முன்னதாக, மின்சார ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது. அதன்பின்னரே அவர்கள் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags : Women ,corona test , Women cheer on suburban electric trains after corona test
× RELATED சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி போலீசார், பெண்கள் பங்கேற்பு