ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்

எப்படிச் செய்வது?

மிளகு, பூண்டை இடித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் சிக்கன் ஸ்டாக் செய்ய கொடுத்த பொருட்களை போட்டு 1 மணி நேரம்  வேகவைக்கவும். பிறகு ஸ்டாக்கை வடித்து தனியே வைக்கவும். சிக்கனை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில்  வெண்ணெய், ஸ்பிரிங் ஆனியன், 3/4 கப் ஸ்வீட்கார்ன் மற்றும் 3/4 கப் ஸ்வீட்கார்ன் அரைத்த விழுது, சிக்கன் சேர்த்து ஒரு கிளறு கிளறி, 5 கப்  சிக்கன் ஸ்டாக் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கரைத்த கார்ன்ஃப்ளார் மாவை ஊற்றி சிறிது கெட்டியானதும் உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.  கடைசியாக அடித்த முட்டையை கொதிக்கும் சூப்பில் சிறிது சிறிதாக ஊற்றி கிளறி விடவும். ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து சூடாக பரிமாறவும்.