×

மழைநீர் தேக்கம், குடிநீர், மின்வாரிய பணிகளுக்கு தோண்டும் பள்ளங்களால் சென்னை பஸ்களில் வீணாகும் பயணிகளின் நேரம்: இரவில் கால் வலிக்க காத்திருப்பு

* அரசு, தனியார் ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் தாமதம்
* ஊர்ந்து செல்வதால் நோயாளிகள், முதியோர் அவதி
* எம்டிசி என்ற சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் 3,300 பஸ்கள் இயக்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு 2,300 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.
* கோயம்பேடு பஸ் முனையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களுக்கு இடையில் இரவு முதல் அதிகாலை வரை போதிய அளவு இணைப்பு பஸ்கள் சேவை இல்லை.
* சென்னையின் போக்குவரத்து நெரிசல் காரணமாக பகல் நேரத்திலும் பேருந்துகள் உரிய நேரத்தில் பஸ் நிறுத்தங்களுக்கு வருவதில்லை.

சென்னை: மாநர சென்னை பேருந்தில் செல்லும் பயணிகள் உரிய நேரத்தில் தாங்கள் நினைக்கும் நேரத்துக்கு செல்ல முடியாமல் பேருந்திலும் பஸ் நிறுத்தத்திலும் பல மணிநேரம் செலவிடுகின்றனர். இதற்கு பஸ் வருகையை முன்கூட்டியே தெரிவிக்கும் ‘லேம் ஆப்’ செயல்பாட்டுக்கு கொண்டு வராதது மற்றும் பஸ்கள் எண்ணிக்கையில் குறைத்ததே காரணம் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை, சேலம், விழுப்புரம், கோவை உள்ளிட்ட இடங்களில் கோட்டங்கள்மூலம் தினசரி 21 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல், அரசு விரைவுப்போக்குவரத்துக்கழகம் (எஸ்இடிசி) சார்பில், தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் இலக்கை சென்று அடையுமா என்பது ஓட்டும் டிரைவருக்கே தெரியாது. இதனால், முக்கிய பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்களில் பயணிகள் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவல நிலை காணப்படுகிறது.

பஸ் எப்போது வரும், எங்கே வந்து கொண்டிருக்கிறது என்பது பயணிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.  இதையடுத்து, பஸ்கள் நிலை குறித்து பயணிகள் தங்கள் மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் கொள்ளும் வகையில் ‘லேம்ப்-ஆப்’ அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.  ஒருமுறை பயணி தான் பயணத்தை தொடங்கும் பஸ் ஸ்டாப்பின் விபரத்தை பதிவு செய்து விட்டால், அவ்விடத்திற்கு சம்மந்தப்பட்ட நேரத்தில் வரும் பஸ்களின் விபரத்தை தெரிந்துகொள்ள முடியும். ரூட் நம்பரும் இடம்பெறும். தேவையான ரூட்டை தேர்வு செய்து, அவ்வழியாக இயக்கப்படும் பஸ்களை எளிதாக அறிந்துகொள்ளலாம்.  முதற்கட்டமாக சென்னையில் இயக்கப்படும் 3,300 எம்டிசி பஸ்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதன்பிறகு மற்ற கோட்டங்களிலிருந்து இயக்கப்படும் பஸ்கள் என மொத்தமாக, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அனைத்து அரசு பஸ்களிலும் ‘ஜிபிஎஸ்’ பொருத்த வேண்டும். இதற்கான பணிகள் தற்போது முடங்கி உள்ளது. மேலும் ‘லேம்ப் ஆப்’க்கான பணியும் முடங்கியது. கொரோனா ஊரடங்கில் பஸ்களின் சேவை நிறுத்ப்பட்டு தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை முறையாக எடுக்காத காரணத்தால் எம்டிசி மற்றும் பிற போக்குவரத்து மண்டலங்கள் குறைந்த அளவே பஸ்களை இயக்கி வருகிறது. சென்னையில் தலைமை செயலகம், ஐடி பூங்கா, தி.நகர் போன்ற வர்த்தக கேந்திரம், துறைமுகம், சுற்றுலா தலங்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள், கோயம்பேடு, சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் முனையங்கள் இருக்கிறது. இவ்வளவு பிசியான சென்னையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை பஸ் சேவை என்பது முற்றிலும் இல்லை என்பது வேதனையான விஷயம்.

அதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளில இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குமான பஸ் சேவை மிகவும் குறைந்துள்ளது. போதிய அளவு பஸ்கள் இருந்தாலும் அவை பராமரிக்கப்படாலும், இயக்க முடியாத அளவில் உள்ளது. மேலும் போதிய விழிப்புணர்வு மற்றும் திட்டமிடல் இல்லாத காரணத்தால் பஸ்கள் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பஸ் ேசவை முன்கூட்டியே நிறுத்தப்படுகிறது. மேலும் சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெரிச்சல், மெட்ரோ ரயில்வே பணிகள், சிக்னல் குளறுபடி, சாலைகளில் மழைநீர் தேக்கம், மின்வாரியம், குடிநீர்வடிகால்வாரியம், தொலைபேசி துறை உள்பட பல்வேறு துறைகள் சாலைகளில் பள்ளம் தோண்டி வைத்துள்ளது.

இதனால் தாம்பரத்தில் கிளம்பிய பஸ் எப்போது பிராட்வே சென்று சேரும் என்பது டிரைவர் உள்பட யாருக்கும் தெரியாது. மேலும் அலுவலக நேரம், கல்லூரி நேரம், தொழிற்சாலைகள் நேரம் முடிந்து அனைவரும் ஒரே சமயத்தில் சாலைகளில் பயணிக்கும்போது பஸ்களை நத்ததை வேகத்திலேயே இயக்க முடிகிறது. இதனால் ஒரு நகரப்பேருந்து குறைந்த பட்சம் 30 நிமிடம் முதல் அதிக பட்சம் 1 மணிநேரத்துக்கும் மேல் தாமதமாக இலக்கை சென்று அடைகிறது. இது ெதரியாமல் பொதுமக்கள் கால்கடுக்க பஸ் நிலையங்களில் காத்திருந்து ஆட்டோ அல்லது வீட்டிற்கே திரும்பி செல்லும் அவலநிலை உள்ளது. இதில் பெண் பயணிகள், வயதானவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. தற்போது கட்டுமான நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் இவர்கள் நம்பியிருப்பது அரசு பஸ்களைத்தான். ஆனால் அரசு பஸ்களில் சேவை வெகு விரைவாகவே முடிந்து விடுவதால் அவர்கள் கடும் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

ஆட்டோக்களில் கூடுதல் செலவு செய்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு லேம்ப் ஆப் சேவையை உடனே துவக்க வேண்டும் என்பதே. பல கோடி ஒதுக்கிவிட்டு அப்பணிகள் இன்னும் முடிவடையாததால் மக்களின் வரிப்பணம் முடங்கி உள்ளது. இன்னும் தாமதமானால் மக்கள் கடும் மனஉளைச்சலுடனே பஸ்சில் பயணிக்க முடியும். மேலும் மாதங்கள் கடக்க கடக்க திட்டச் செலவும் அதிகரித்து அதுவும் மக்களின் தலையிலேயே இடியாக இறங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அரசு நிர்வாக இயந்திரம் வேகமாக செயல்பட்டு மக்களின் பிரச்னையை தீர்க்க வேண்டும்.  

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னையில் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி 2,300 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் எனக்கூறியதால் 200 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகிறது. தொடர்ந்து கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ‘லேப் ஆப்’யை விரைவில் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளும் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திக்கு தெரியாத காட்டில்...
ரயில்களை போல எத்தனை மணிக்கு புறப்படும் எத்தனை மணிக்கு குறிப்பிட்ட இலக்கை சென்றடையும், தற்போது எந்த இடத்தில் வந்து கொண்டு இருக்கிறது என்ற தகவல்கள் ெதரியாமல் பயணிகள் பஸ்சிலேயே இருக்க வேண்டி உள்ளது. டிரைவர் அல்லது கண்டக்டர்கள் கூட போக்குவரத்து பிரச்னை இல்லாவிட்டால் இத்தனை மணிக்கு சென்று சேரும். சென்னையில் உள்ள போக்குவரத்து நெரிசலை
பொறுத்தே சொல்ல முடியும் என்று தங்கள் இயலாமையை ஓப்பனாகவே ஒப்புக் ெகாள்கின்றனர்.

எல்லாவற்றிலும் தாமதம்
சென்னையில் தாம்பரம், வேளச்சேரி, பூந்தமல்லி, ஆவடி, கூடுவாஞ்சேரி, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான மக்கள் சென்னைக்கு வேலைக்கு வருகிறார்கள். ஆனால் பஸ்கள் தாமதத்தால் அலுவலக ஊழியர்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், நேர்முகத் தேர்வுக்கு வருவோர், தனியார் அலுவலக ஊழியர்கள் தினமும் 1 மணிநேரம் முன்பே வீட்டை விட்டு கிளம்பினாலும், பல்வேறு பிரச்னைகளால் அவர்கள் பணியிடத்துக்கு 30 முதல் 45 நிமிடம் தாமதமாகவே செல்கின்றனர்.

லேம்ப் ஆப் எப்படி வேலை செய்யும்
பஸ் பயணி ‘லேம்ப் ஆப்’பை தங்களது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இது, ‘ஆன்ட்ராய்டு’ மற்றும் ’ஐஓஎஸ்’ இயங்குதளங்களில் இலவசமாக கிடைக்கும். பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘ஆப்’பிற்குள், பஸ் ஸ்டாண்டில் நின்றிருக்கும் பயணி செல்லும் போது, அதில் அந்த இடத்துக்கு எந்த பஸ் எப்போது வரும், அதன் வழித்தட எண், இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்ற தகவலை அறியலாம்.Tags : passengers ,Chennai , Passengers' time wasted on Chennai buses due to ditches dug for rainwater harvesting, drinking water and electricity works: Waiting for foot pain at night
× RELATED 200 பஸ்கள் சென்னை சென்றதால் தர்மபுரியில் பயணிகள் தவிப்பு