×

வேளாண் கமிஷன் அமைக்கப்படுமா?

மதுரை: சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த வக்கீல் சூரியபிரகாசம், தமிழகம் முழுவதும் நெல்கொள்முதல் நிலையங்கள் அமைக்க கோரி தாக்கல் செய்த மனு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பு பதில் மனுவில், ‘‘நெல் கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பாக 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.2.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘‘வேளாண் கமிஷன் அமைப்பது தொடர்பாக அரசுத்தரப்பில் பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.Tags : Agriculture Commission , Will the Agriculture Commission be set up?
× RELATED சீர்காழி அருகே எருக்கூர் கிராமத்தில்...