×

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் ஆன்லைன் மாணவர் சேர்க்கை தரவரிசை வரம்பு வெளியீடு

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மாணவர் சேர்கைக்கான தரவரிசை வரம்பு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், ஆன்லைன் முதற்கட்ட கலந்தாய்விற்கான தரவரிசை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப்பிரிவில் 1 முதல் 10,755 வரையும், பிற்படுத்தப்பட்டோர் (பி.சி) 1 முதல் 10,797 வரை, பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் (பி.சி முஸ்‌லிம்) 1 முதல் 23,413 வரை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 1 முதல் 10,798, ஆதிதிராவிடர் 1 முதல் 16,791, அருந்ததியர் 1 முதல் 20,186 வரை, பழங்குடியினர் 1 முதல் 24,509 வரை நடக்கிறது.

மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கீடு டிசம்பர் 2ம் தேதி இணையதளம் மூலம் அறிவிக்கப்படும்.  மாணவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், மாணவர்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண் மூலம் தெரிவிக்கப்படும் என முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.


Tags : Tamil Nadu Agricultural University , Release of Online Student Admission Rankings at Tamil Nadu Agricultural University
× RELATED மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம்...