×

சொல்லிட்டாங்க...

* அரசின் கல்வி கட்டண காலதாமத அறிவிப்பால் இன்றைக்கு பல மாணவர்களின் மருத்துவ கனவு, கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டவில்லை என்றாகிவிட்டது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

* மக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் புயல் கரையை கடக்கும்போது மின்சாரத்தை துண்டிக்க இருக்கிறோம். மின்வெட்டு என யாரும் நினைத்து விடக் கூடாது. - அமைச்சர் தங்கமணி

* தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தவர்களுக்கு முழு கட்டணமும் அரசே செலுத்தும் என்பது, அரசு கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கு பாரபட்சம் காட்டப்படும் நிலை. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

* தமிழக அரசு துறை பொறியாளர்களுக்கும், மத்திய பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கும் ஒரே ஊதியம் நிர்ணயிப்பது நியாயமல்ல. - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Told...
× RELATED சொல்லிட்டாங்க...