கராச்சியை இணைப்பது இருக்கட்டும்... முதல்ல பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுங்கப்பா! பட்நவிசுக்கு சிவசேனா நெத்தியடி

மும்பை: ‘கராச்சி ஒருநாள் இந்தியாவின் ஒருபகுதியாகும்’ என மகாராஷ்டிரா முன்னாள் தலைவர் பட்நவிஸ் கூறியதற்கு, சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது. மும்பை பாந்த்ரா பகுதியில் ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற கடையின் பெயருக்கு பதிலாக, மராத்தியில் ஏதாவது ஒரு பெயரை வைக்கக் கோரி கடை உரிமையாளிடம் சிவசேனா தலைவர் நிதின் நந்த்கோக்கர் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த விவகாரம் தொடர்பாக பாஜ தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான பட்நவிஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் அகண்ட பாரதம் (ஒருங்கிணைந்த இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே ஒருநாள் பாகிஸ்தானின் கராச்சியும் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும். அதற்கான நேரம் நிச்சயம் வரப் போகிறது’’ என்றார். இதற்கு பதிலடி தந்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது பேட்டியில், ‘‘கராச்சி இந்தியாவுடன் இணைந்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் அதற்கு முன் முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை மீட்டெடுங்கள். அப்புறம் கராச்சிக்குப் போகலாம்’’ என கூறி உள்ளார்.

Related Stories: