×

டிஜிட்டல் முறையில் காப்பீடு ஏஜென்ட்களுக்கு எல்ஐசி புது வசதி

சென்னை: ஏஜென்ட்கள் மூலம் காப்பீடு எடுப்பதற்காக புதிய டிஜிட்டல் நடைமுறையை எல்ஐசி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசி நிறுவனம் புதிதாக ஆனந்தா என்ற பெயரில் டிஜிட்டல் ஆப்ஸ் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தாள்களற்ற முறையில் எல்ஐசி பாலிசியை ஏஜென்ட்கள் மூலம் பாலிசி எடுக்க முடியும். ஆதார் அடிப்படையில் மின்னணு முறையில் சரிபார்க்கப்பட்ட பாலிசி எடுக்கலாம். இந்திய காப்பீட்டு துறை வரலாற்றில், இப்படி ஒரு புதுமையான வசதியை அறிமுகம் செய்வது இதுவே முதல் முறை எனக் கூறப்படுகிறது.

தற்போதைய சவாலான காலக்கட்டத்தில் காப்பீடு விற்பனையை அதிகரிக்கவும், ஏஜென்ட்களுக்கான புதிய விற்பனை வாய்ப்பை உருவாக்கவும் இது உதவும். இதை பயன்படுத்துவது குறித்து ஆன்லைன் மூலம் ஏஜென்ட்களுக்கு வீடியோவில் விளக்கப்பட்டது. ஆனந்தா என்ற இந்த புதிய ஆப்சை அறிமுக நிகழ்ச்சி, வீடியோ கான்பரசின்சிங் முறையில் நடந்தது. இதில் எல்ஐசி தலைவர் எம்.ஆர்.குமார் இதனை வெளியிட்டார். எல்ஐசி நிர்வாக இயக்குநர்கள் டி.சி.சுசில் குமார், முகேஷ் குமார் குப்தா, ராஜ்குமார் மற்றும் இதர மூத்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

Tags : LIC ,facility ,agents , LIC launches new facility for digitally insured agents
× RELATED ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு: 400 ஏஜெண்டுகளின் சொத்துக்கள் முடக்கம்!