×

யாதவர்களுக்கு 16% இடஒதுக்கீடு கோகுல மக்கள் கட்சி தீர்மானம்

சென்னை: கோகுல மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நிறுவன தலைவர் எம்.வி.சேகர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் யாதவ சமுதாய மக்களின் மனக்குமுறல்களை மக்களிடம் கொண்டு சென்று பிற்படுத்தப்பட்டவர்களை ஒன்று திரட்டி வெற்றி வாகை சூடவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விகிதாச்சார முறையில் இட ஒதுக்கீடு வழங்கும் வரை தமிழக யாதவர்களுக்கு 16% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 2021ம் ஆண்டு பொதுத்தேர்வில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க கட்சியின் நிறுவனர் தலைவருக்கு இந்த மாநாட்டில் முழு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

Tags : Gokula People's Party , Gokula People's Party resolution 16% reservation for Yadavs
× RELATED சுடுகாட்டில் சடலம் தகனத்திற்கு...