×

தலைமை செயலகம் எதிரே அடையாளம் தெரியாத நபர் எரித்து கொலை: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

சென்னை: சென்னை ராஜாஜி சாலையில் தலைமை செயலகம் அமைந்துள்ளது. அந்த பகுதியில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். தலைமை செயலகம் எதிரே பூங்கா உள்ளது. இதில், உயர் அதிகாரிகள் பலர் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். நேற்று காலை அதிகாரிகள் சிலர் இங்கு நடைபயிற்சி செய்தபோது, பூங்காவின் ஒரு பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இதுபற்றி கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சடலம் கைப்பற்றப்பட்ட பகுதியில் பெட்ரோல் கேன் ஒன்று கிடந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தலைமை செயலகம் எதிரே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் அருகே உள்ள பகுதியில் கஞ்சா விற்பனையால் அடிக்கடி ரவுடிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது. இதில் ஏற்பட்ட மோதலில் கொலை செய்து, உடலை பூங்காவில் பெட்ரோல் ஊற்றி எரித்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : death ,General Secretariat , Unidentified man burnt to death in front of General Secretariat: Police seize body and investigate
× RELATED மானாமதுரை நீதிமன்றம் எதிரே வாலிபர் வெட்டி கொலை 4 பேருக்கு வலை