×

நிவர் புயல் கரையை கடக்கும் போது பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும்: 1.50 லட்சம் புதிய மின்கம்பங்கள் தயார்; மின்துறை அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: நிவர் புயல் கரையை கடக்கும்போது பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னை அண்ணா சாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நிவர் புயலின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு நடந்தது. பின்னர் அமைச்சர் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதிப்புக்குள்ளாகும் மாவட்டங்களில் தேவையான அளவுக்கு மின்கம்பங்கள், பணியாளர்கள், உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். 1.50 லட்சம் மின்கம்பங்கள் தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு கருதி புயல் கரையை கடக்கும் போது மின்சாரத்தை துண்டிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* 1912 எண்ணை டயல் செய்யலாம்
புயலின் போது பாதிப்பு ஏற்பட்டால், 1912 என்ற எண்ணிலும், எனது தொலைபேசி எண்ணுக்கும் பொதுமக்கள் அழைக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

* வாட்ஸ்அப்பில் புகார்
தமிழக மின்வாரியத்தில் புயல் கரையை கடக்கும் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு அலுவலகத்திற்கும் வாட்ஸ் ஆப் எண் கொடுத்துள்ளோம். எந்த பகுதியில் பழுது ஏற்படுகிறதோ அதை படம் எடுத்து அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : Thangamani , 1.50 lakh new power poles ready; Interview with Power Minister Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...