×

நிவர் புயல் எதிரொலி: நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு வரும் திங்கட்கிழமை ஒத்திவைப்பு

சென்னை: நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு 30-ம் தேதி அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப்படிப்புக்கான கலந்தாய்வு கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டு இருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீடு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 405 இடங்கள் கிடைத்தன. அதில் இந்த கலந்தாய்வு மூலம் 399 இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர்.

இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியால் நாளை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறியது;  நிவர் புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு  2020-2021 வரும் திங்கட்கிழமை அன்று  நடைபெறும் வகையில் மருத்துவ கலந்தாய்வு அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கை மருத்துவக்கல்வி தேர்வு குழு இணையதளத்தில் வெளியிப்படும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்திரவுப்படி நாளை கலந்தாய்வுக்கு ஏற்கனவே வந்திருப்பவர்களுக்கு சுகாதார துறை மூலம் தக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nivar storm echo: Medical consultation scheduled for tomorrow postponed to next Monday
× RELATED நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88...