தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை பெற்ற காந்தியின் கொள்ளுபேரன் கொரோனாவுக்கு பலி

ஜோகன்ஸ்பர்க்: மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் சதீஷ் துபேலியா (66) கொரோனா வைரஸ் பாதிப்பால் தென்னாப்பிரிக்காவில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி உமா துபேலியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நிமோனியா காய்ச்சலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரர் சதீஷ் துபேலியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு மாதம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற நிலையில், அவருக்கு நேற்று (நவ. 22) மாலை மாரடைப்பு ஏற்பட்டதால் காலமானார்’என்று தெரிவித்துள்ளார். காந்தியின் இரண்டாவது மகன் மணிலால் காந்தியின் பேரன் சதீஷ் துபேலியா தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்தார்.

அவருக்கு உமா, கீர்த்தி மேனன் என்ற இரு சகோதரிகள் உள்ளனர். கொரோனா தொற்றால் மரணடைந்த சதீஷ் துபேலியா, ஊடக பணிகளில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக வீடியோகிராஃபர் மற்றும் புகைப்படக் கலைஞராகக் பணிபுரிந்தார். மேலும் தென்னாப்பிரிக்காவின் டர்பனுக்கு அருகிலுள்ள பீனிக்ஸ் பகுதியில் மகாத்மா காந்தியால் தொடங்கப்பட்ட பணிகளையும் கவனித்து வந்தார். காந்தி மேம்பாட்டு அறக்கட்டளைக்கு பலவகைகளில் உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: