×

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!

சென்னை: கொரோனாவால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா தாக்கத்தால் ரத்து செய்யப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான கட்டணத்தை செலுத்தும் படி, அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அண்ணா பல்கலைக்கழக தரப்பில், மார்ச் 27ஆம் தேதிக்கு முன்பே கல்லூரிகள் மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூலித்துவிட்டதாகவும், தேர்வு கட்டணத்தை பொறுத்தவரை தேர்வுக்கு முந்தைய செலவு தேர்வுக்கு பிந்தைய செலவு என சில வகைகள் உள்ளதாகவும், தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து அவற்றை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது போன்ற செலவுகளும் உள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை நவம்பர் 19ம் தேதி நடந்தபோது, தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் தேர்விற்கு பிந்தைய செலவினங்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்நிலையில், தேர்வு கட்டணம் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்துமாறு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Anna University , Examination Fee, Anna University, Judgment, Adjournment
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...