58% பெண்களுக்கு பாலியல் தொல்லை!

நன்றி குங்குமம்

உலக அளவில் சமூக வலைத்தளங்களில் இயங்கும் 58% பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியளிக்கிறது. இதற்காக இந்தியா, பிரேசில், நைஜீரியா, தாய்லாந்து, ஸ்பெயின், அமெரிக்கா உட்பட 22 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரம் பெண்களை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் கலந்துகொண்டவர்களின் வயது 15 முதல் 25 வரை.

ஆன்லைனில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஐந்தில் ஒரு பெண் சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக விலகிக் கொள்கிறார் அல்லது அதில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக் கொள்கிறார். தவிர, பத்தில் ஒரு பெண் தங்களை வெளிப்படுத்தும் விதத்தையே மாற்றிக்கொள்கின்றனர். ஆன்லைன் வழியாக பாலியல் தொல்லை அதிகமாக நடக்கும் இடம் ஃபேஸ்புக். அடுத்து இன்ஸ்டாகிராம். இவற்றுடன் ஒப்பிடும்போது வாட்ஸ்அப், ஸ்நாப்சாட், டுவிட்டரில் குறைவு.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: