20% தனி இடஒதுக்கீடு கேட்கும் வன்னியர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது முதல்வர் கையில்: அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு வழங்க கோரி எந்த வடிவத்தில் போராட்டத்தை நடத்துவது என்பது தொடர்பாக பாமக, வன்னியர் சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் நேற்று இணையவழியில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலையில் கூட்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. பின்னர் கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

நாம் போராட தொடங்கிய 4 நாட்களில் நமது கோரிக்கையை ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்க்கிறோம். தமிழக முதலமைச்சராகிய நீங்கள் முதலில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தாருங்கள். மீதமுள்ளதை நாங்கள் பிறகு பார்த்து கொள்கிறோம். வன்னியர் சமுதாயத்தின் போராட்டத்தை, நாங்கள் கேட்கும் இடஒதுக்கீட்டைக் கொடுத்து முடிவுக்கு கொண்டு வருவது முதல்வராகிய உங்கள் கைகளில் தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: