×

ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஓசூர்: கிருஷ்ணகிரி  மாவட்டம், ஓசூர் எம்.ஜி. ரோட்டில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் பெற்று வருவதாக, கிருஷ்ணகிரி  மாவட்ட லஞ்ச  ஒழிப்பு போலீசாருக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம் மாலை ஓசூர்  சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

இரவு வரை நீடித்த இந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த இணை சார்பதிவாளர் நேரு மற்றும்  சார்பதிவாளர் (பொ) பன்னீர்செல்வத்திடம் இருந்து, கணக்கில் வராத ₹3 லட்சத்து 86 ஆயிரம் சிக்கியது. உரிய ஆவணம் இல்லாததால், லஞ்சமாக பெறப்பட்ட பணம் என்பதை உறுதி செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.


Tags : Hosur , Anti-corruption police raid Hosur affiliate office
× RELATED நீலாங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில்...