×

10ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; டிச.27ல் தேசிய திறனாய்வுத் தேர்வு: தேர்வுத்துறை அறிவிப்பு

நெல்லை: தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்கு 10ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. 2020-21ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்கள் டிச.27ம் தேதி நடக்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வருகிற 30ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 30ம் தேதி கடைசி நாள். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது. தேர்வர்கள் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். போதிய சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : National Performance Examination , 10th grade students can apply; National Performance Examination on Dec. 27: Examination Announcement
× RELATED தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSC) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு