×

விழுப்புரத்தில் பரபரப்பு; பாஜக மாவட்ட தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார்: ரூ5 லட்சம் வாங்கி ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி பாலியல் பலாத்கார புகார் தெரிவித்துள்ளதும், ரூ.5 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக மாநில தலைவருக்கு, விழுப்புரம் மாவட்ட மகளிரணி பொதுச்செயலாளர் காயத்திரி அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் முன்னாள் எம்எல்ஏ கலிவரதனை, மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கும்போதே, எனக்கு கட்சியில் மாவட்ட மகளிரணி தலைவி பொறுப்பு வாங்கி தருகிறேன். கட்சியில் பெரிய ஆளாக்குகிறேன் என கூறி ரூ.5 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார். என்னை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபற்றி வெளியே யாரிடமாவது சொன்னால் “உன்னை தீர்த்துக்கட்டிவிடுவேன்” என கொலை மிரட்டல் விடுக்கிறார்.

கலிவரதனால் என் குடும்பம் நிர்க்கதியாய் உள்ளது. என்னைப் போன்ற பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடுகிறார். எனவே மாவட்ட தலைவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என் வாழ்க்கைக்கு தீர்வு காணுமாறு கோருகிறேன். விழுப்புரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் வந்து விசாரணை செய்தால் பல உண்மைகள் வெளியில் வரும். விசாரணை செய்து எனக்கு நீதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் மீது மகளிரணி நிர்வாகி பாலியல் புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர், மகளிரணி நிர்வாகி பேசும் ஆடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிர்வாகி: என் வயிறு பத்தி எரியுது, நீ நாசமாய் போய் விடுவாய். மாவட்ட தலைவர்: தேவையில்லாமல் பேசாதே, தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதே, டென்ஷனை குறைத்து விட்டு வேலையை பார். நிர்வாகி: நீ நல்ல கதிக்கே போக மாட்டாய். (அழுகிறார்). மாவட்ட தலைவர்: தேவையில்லாமல் பேசாதே, எதற்காக நீ இப்போது அழுகிறாய், தேவையில்லாமல் சாபம் விடாதே. நான் உனக்கு இப்போது என்ன துரோகம் செய்துவிட்டேன். ஏண்டி இப்படி பண்ற, கொஞ்ச நாளைக்கு கட்சி வேலையை பார். ஆட்டோமெட்டிக்கா கடவுள் உனக்கு நல்ல வழி காட்டுவார்.

கம்முனு இரு, நீ என்னை திட்டுகிற வேலை வெச்சுக்காதே. சரி ரைட், ஓகே, கூல் டவுன், டேக் இட் ஈஸி. நான் வேற அழுதுடுவேன்டி.கொஞ்ச நாளைக்கு அமைதியா இரு, அது மாதிரி ஆள் நான் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் எப்பவோ மலையேறிப் போச்சு. இதுபோல இனிமேல் நடக்காது. உன் வேலையை பார். நீ நினைக்கறது எல்லாம் தெரியும். நான் யார் கூடயும் ஓடிட மாட்டேன். யார்கிட்டயும் போய்யிட மாட்டேன், கம்முனு விடு. இவ்வாறு அந்த உரையாடல் செல்கிறது.

Tags : BJP district chief sexually harassed by woman administrator: Rs 5 lakh accused of cheating
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்