×

தமிழகத்தில் புதிதாக 1,663 பேருக்கு கொரோனா: 18 பேர் மரணம்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பேருக்கு 1,663  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே சமயம் தொற்று ஏற்பட்டவர்களை விட கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 2,133 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று 69,190 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் 1,663 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 500க்கும் கீழ் தொற்று பதிவானது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 2,133  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது வரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 838 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே சமயம் 12 ஆயிரத்து 916  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விரைவில் அது 10 ஆயிரத்துக்கும் கீழாக குறையும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. எனினும் நேற்று மட்டும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 7 பேர், அரசு மருத்துவமனையில் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,586 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,deaths ,Tamil Nadu , Corona for 1,663 new people in Tamil Nadu: 18 deaths
× RELATED தமிழகத்தில் புதிதாக 1,819 பேருக்கு கொரோனா: 12 பேர் மரணம்