×

டேரன் பிராவோ அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை

குயின்ஸ்டவுன்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் டேரன் பிராவோ அதிரடி சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலை  பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதல்  டி20 போட்டி நவ. 27ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் போட்டியில் விளையாடிவிட்டு நியூசிலாந்து சென்றுள்ள இரு அணி வீரர்களும்  இன்னும் தனிமைப்படுத்தலை முடிக்கவில்லை. இந்நிலையில் நியசிலாந்து-ஏ அணிக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்  விளையாடி வருகிறது. இந்த 3 நாள் போட்டியில் டாஸ் வென்று களம் கண்ட நியூசிலாந்து 79 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 308 ரன் குவித்து முதல்  இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ரச்சின் ரவீந்திரா அதிகபட்சமாக 112 ரன் விளாசினார்.

நிகோல்ஸ் 76, கான்வே 46*, கார்ட்டர் 41* ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோசப், ஹோல்டர், ரீபர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 2வது நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 329 ரன் எடுத்திருந்தது (98 ஓவர்).  அந்த அணியின் டேரன் பிராவோ அதிரடியாக விளையாடி 135 ரன் (214 பந்து, 13 பவுண்டரி, 5 சிக்சர்), ஷம்ரா புரூக்ஸ் 80 ரன் எடுத்தனர். கேப்டன்  சேஸ் 42 ரன் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் பந்துவீசிய 7 பேரில் 6 பேர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 21 ரன் முன்னிலை  பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : West Indies , Darren Bravo Action Century: West Indies lead
× RELATED சில்லி பாயின்ட்…