கனடாவில் உள்ள நூற்றாண்டு பழமை மிக்க அன்னப்பூரணி தேவி சிலை இந்தியாவிடம் ஒப்படைப்பு

டொரன்டோ: இந்தியாவின் வாரணாசியில் இருந்து 100 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட அன்னப்பூரணி தேவி சிலை தற்போது கனடா நாட்டில் உள்ள ரெஜினா பல்கலைக் கழகத்தின் தொகுப்பான மெக்கன்சி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தனது பொருட்காட்சி ஒன்றை அங்கு வைப்பதற்காக சென்ற திவ்யா மெக்ரா என்ற கலைஞர் அன்னப்பூரணி தேவியின் சிலை அங்கிருப்பதை கண்டார். இது குறித்து கேட்ட போது, 1913ம் ஆண்டு மெக்கன்சி இந்தியா சென்ற போது வாங்கி வந்ததும், கங்கை நதிக்கரை படிக்கட்டில் அமைந்துள்ள கோயிலில் இருந்து திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அதனை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 19ம் தேதி காணொலி மூலம் நடந்த சிறப்பு பூஜைக்கு பின்பு, அதனை தயாகம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல்கலைக் கழக தற்காலிக தலைவர், துணை வேந்தர் தாமஸ் சேஸ், கனடாவுக்கான இந்திய தூதர் அஜய் பிசாரியா ஆகியோர் பங்கேற்றனர். அன்னப்பூரணி தேவி, நூறாண்டுகளுக்கு பிறகு விரைவில் தாயகம் வந்தடைய இருக்கிறார்.

Related Stories: