சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு

ரியாத்: சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். சவுதி அரேபியாவில் ஜி 20 மாநாடு முதன்முறையாக நடைபெறுகிறது. தலைநகர் ரியாத்தில் கடந்த செப்.,மாதம் 28 ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மாநாடு இன்று துவங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் உச்சிமாநாட்டிற்கு தலைமை தாங்குகிறார். அனைவருக்கும் 21 ம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்ந்து கொள்வது என்ற தலைப்பின் கீழ் மாநாடு நடைபெறுகிறது. கூட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்தும் மற்றும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் வளரக்கூடிய நிலைமைகளை உருவாக்குதல், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகளை பகிர்ந்து கொள்ள தைரியமான உத்திகளை கடைபிடித்தல் உள்ளிட்ட பொருளில் மாநாடு நடைபெறுகிறது.

ஜி 20 மாநாட்டில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்ஸிகோ, ரஷ்ய கூட்டமைப்பு, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 19 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

Related Stories: