நவதானிய மசாலா சுண்டல்

எப்படிச் செய்வது?

நவதானியங்களை 10 மணி நேரம் ஊறவைத்து, உப்பு போட்டு குக்கரில் ேவகவைத்து கொள்ளவும். கறிவேப்பிலை, கசகசா, சோம்பு, 2 காய்ந்தமிளகாய் சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, மீதியுள்ள காய்ந்தமிளகாய் கிள்ளி போட்டு தாளித்து, பொடித்த பொடி, வெந்த நவதானியம், உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து கிளறி, எள் பொடி, வேர்க்கடலைப்பொடி தூவி கிளறி பரிமாறவும்.