மாவடு மசாலா

எப்படிச் செய்வது?

மாவடுவை கழுவி ஒவ்வொரு மாவடுவிலும் நான்கு துளைகள் இட்டு கொள்ளவும். மிக்சியில் காய்ந்தமிளகாய், இஞ்சி, பூண்டு, சாம்பார் வெங்காயம், சோம்பு, கசகசா, முந்திரி, தேங்காய்த்துருவல், சிறிது தண்ணீர் விட்டு கெட்டியான விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், உப்பு, 1/4 கப் தண்ணீர், மாவடு சேர்த்து கிளறவும். 2, 3 கொதி வந்ததும் அரைத்த விழுது சேர்த்து மேலும் 3 கொதி விட்டு அனைத்தும் சேர்ந்து வந்ததும் இறக்கி கொத்த மல்லித் தழையைத் தூவி அலங் கரிக்கவும். மசாலா சாதம், சப்பாத்தி, தோசையுடன் பரிமாறவும்.