மலாய் கீர்

எப்படிச் செய்வது?

சிறிதளவு பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். கடாயில் சிறிது நெய்யை விட்டு சூடானதும் டிரை ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸை வறுத்து வடித்து தனியே வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை சேர்த்து கைவிடாமல் நன்கு சுண்டக் காய்ச்சவும். அதில் படரும் பாலாடையை ஒதுக்கி காய்ச்சவும். பால் கெட்டியாக 1/2 லிட்டராக சுண்டி வந்ததும் இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும். இந்த கெட்டியான பால் மலாய் ஆகும். இப்போது வறுத்த நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ், குங்குமப்பூ அனைத்தையும் தூவி அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.