மினி வெண்ணெய் முறுக்கு

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் பதப்படுத்திய அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் காய்ச்சிய சூடான எண்ணெய், தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து, மிருதுவான முறுக்கு மாவாக பிசையவும். கடாயில் எண்ணெயை காயவைத்து பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு பிழிந்து, இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எண்ணெயில் இருந்து வடித்தெடுத்து பரிமாறவும்.