மொறு மொறுப்பான பனீர் பக்கோடா

எப்படிச் செய்வது?

பனீரை சிறு சிறு சதுரமாக நறுக்கி, அதன் நடுவில் சிறிது கீறி பூண்டு சட்னியை அடைத்து தனியாக வைக்கவும். தட்டில் பூந்தியை பொடியாக்கி கொள்ளவும். பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், ஆப்ப சோடா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து 15 நிமிடங்கள் வைக்கவும். பனீர் துண்டுகளை மாவு கலவையில் முக்கியெடுத்து, பூந்தியில் பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து பூண்டு சட்னியுடன் பரிமாறவும்.