கதவுகளற்ற வீடுகள்

மகாராஷ்ட்ராவில் சனி சிக்னாபூர் மிகவும் பிரபலமான ஊர். ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் தமிழர்கள் தவறாமல் செல்லும் ஸ்தலம் சனி சிக்னாபூர். இங்குள்ள சனீஸ்வரன் கோயில் மிகவும் பிரபலம். சுயம்புவான சனீஸ்வரனின் தலையில் கோயில் நுழைவில் மக்கள் ஊற்றும் நல்லெண்ணெய் நேரே அவர் தலையில் அபிஷேகமாய் விழும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இந்த சனி சிக்னாபூரின் இன்னொரு சிறப்பு இந்த ஊரில் உள்ள வீடுகளில் கதவுகளே இல்லை. திருட்டு பயம் எதுவும் இல்லை.

ஊரின் காவல் தெய்வமான சனி தண்டித்துவிடுவார் என்ற பயத்தில் திருடர்கள் நுழைவதே இல்லை என்பதால், வீடுகளுக்கு கதவுகள் வைக்கும் செலவு மிச்சம். முன்னோர்கள் காலத்திலிருந்தே இப்படித்தான் என்பதால் புதிதாய் கட்டப்படும் வீடுகளும் கதவுகள் இன்றி கட்டப்படுகின்றன என்கிறார்கள். திருடர்களை விடுங்க நாய்கள் நுழையாதா பாஸ்?

Related Stories:

>