39 மனைவிகள் 94 குழந்தைகள்… இந்தியாவின் மிகப்பெரிய குடும்பஸ்தர்!

சியோனா சானாவுக்கு 60 வயது. மிசோராமின் பக்தவ்ங் கிராமத்தில் வசித்து வருகிறார். இன்றைய தேதியில் இவர்தான் மிகப் பெரிய குடும்பஸ்தர். இவருக்கு இப்போதுவரை, 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள்கள், 33 பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே கூட்டுக் குடும்பமாக சுமார் 100 அறைகள் கொண்ட ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம்.

தன்னுடைய பதினைந்து வயதில் முதல் திருமணம் செய்தார் சியோனா. இப்போது, இதோடு நிறுத்துவீர்களா என்று கேட்டால், யாருக்குத் தெரியும் அது கடவுள் ஆசி என்று சிரிக்கிறார். மனுஷன் கல்யாணம் பண்றதையே தொழிலா வைச்சிருக்கார்!

Related Stories:

>