சூப்பர் குக்

நன்றி குங்குமம்

கேரளாவின் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி சான்விதான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். இட்லி, பன்னீர் டிக்கா, சாண்ட்விச், பான் கேக், மஸ்ரூம் டிக்கா... என 33 வகையான உணவுகளைச் சமைத்து அசத்துகிறார் இந்தச் சுட்டி. அதுவும் ஒரு மணி நேரத்துக்குள் இவ்வளவையும் சமைப்பது ஹைலைட். கேமரா ஆன் செய்த அடுத்த நொடியில் நான்கைந்து கேஸ் அடுப்புகளைப் பற்றவைத்து, கண்ணை மூடித் திறப்பதற்குள் சமைக்கத் தேவையான பாத்திரங்களையும் பொருட்களையும் தயார் செய்கிறார் சான்வி.

இட்லி வெந்துவிட்டதா என்று பார்த்தவாறே, சாண்ட்விச்சிற்குத் தேவையான காய்கறிகளை நறுக்குகிறார். இப்படி இவர் சமைப்பதை ஆன்லைனில் பார்த்து அங்கீகரித்து சாதனையாளர் சான்றிதழைக் கொடுத்திருக்கிறது ‘ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’. ஒரே நேரத்தில் இவ்வளவு உணவுகளைச் சமைத்தாலும் எதன் சுவையும் குறையவில்லை. இந்த சூப்பர் குக்கின் தந்தை விமானத்துறையில் பணிபுரிகிறார். சமையலில் கில்லாடியான அம்மாதான் சான்விக்கு இன்ஸ்பிரேஷன்.

தொகுப்பு: த.சக்திவேல்

Related Stories: