×

சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்காக தமிழக போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு மத்திய அரசு விருது

சென்னை: சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்காக தமிழகத்தை சேர்ந்த 5 போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படுகிறது. இது குறித்து மத்திய அரசு தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில்: 2020ம் ஆண்டில் சிறப்பு புலனாய்வு நடவடிக்கைக்காக விருது வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் டெல்லி, கர்நாடகா, குஜராத், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த போலீசார் இடம் பெறுகின்றனர். இதில் சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன், க்யூ பிரிவு எஸ்.பி மகேஷ், திருவண்ணாமலை எஸ்.பி. அரவிந்த், சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி பண்டரிநாதன், சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு தமிழக டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Police Officers for Special Investigation , Central Government Award for 5 Tamil Nadu Police Officers for Special Investigation
× RELATED உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம்: மத்திய அரசு விருது