×

தங்கம் விலையில் மாற்றம் சவரன் ரூ. 208 அதிகரிப்பு: மீண்டும் ரூ. 38 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை கடந்த 2 மாதமாக விலை ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. சில நேரங்களில் அதிரடியாக உயர்ந்தும் வருகிறது. கடந்த 27ம் தேதி ஒரு சவரன் ரூ.38,048க்கும், 28ம் தேதி ரூ.38,144, 29ம் தேதி ரூ.37,928க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.4,734க்கும், சவரன் ரூ.37,872க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலையில் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம் காணப்பட்டது. கிராமுக்கு ரூ.26 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,760க்கும், சவரனுக்கு ரூ.208 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,080க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

அதே நேரத்தில் சவரன் மீண்டும் ரூ.38 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோருக்கு ஒருவித அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் திருமணம் உள்ளிட்ட முகூர்த்த தினங்கள் அதிக அளவில் வருகிறது. தீபாவளி உள்ளிட்ட விசேஷ தினங்கள் வேறு வருகிறது. இந்த நேரத்தில் நகை வாங்க நினைப்போருக்கு தங்கம் விலை உயர்வு கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையில் இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும்.

Tags : Gold prices rise by Rs. 208 increase: Again Rs. 38 thousand
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...