×

தலைமை கூட்டுறவு வங்கி உதவியாளர் பதவிக்கான நேர்முக தேர்வு 9ம் தேதி நடைபெறுகிறது

சென்னை: தலைமை கூட்டுறவு வங்கிகளுக்கான உதவியாளர் பதவிக்கான நேர்முக தேர்வு வருகிற 9ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமை கூட்டுறவு சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக மாநில ஆள்சேர்ப்பு நிலையம் 11.01.2020 அன்று அறிவிப்பு வெளியிட்டது. அதற்கான எழுத்து தேவு 01.03.2020 அன்று சென்னையில் நடந்தது.

எழுத்துத்தேர்வு முடிவுகள் 16.10.2020 அன்று மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு 09.11.2020 முதல் 11.11.2020 வரை சென்னையில் நடைபெறவுள்ளது. நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அனுமதி சீட்டினை மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் இருந்து (www.tncoopsrb.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : interview ,Chief Co-operative Bank Assistant , The interview for the post of Chief Co-operative Bank Assistant will be held on the 9th
× RELATED மழைக்காலம் மிகவும் சவாலானது; கவனமாக...