×

மேட்டூர் நீர்மட்டம் 100 அடியாக நீடிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது நேற்றும் அதே அளவில் நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 8271 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 12,900 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், நேற்று முன்தினம் 100.42 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 100.10 அடியானது. நீர்இருப்பு 64.97 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur , Mettur water level extends to 100 feet
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.30 அடியாக அதிகரிப்பு