×

நீட் தேர்வு பயிற்சிக்கு 20,000 பேர் விண்ணப்பிப்பு அமைச்சர் தகவல்

கோபி: ‘நீட் தேர்வு பயிற்சிக்கு நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்’ என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நீட் தேர்வில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக 303 பேர் கூடுதலாக மருத்துவர்களாக முடியும். பள்ளி திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை. இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். தனியார் பள்ளியில் இருந்து 5.25 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். திறந்த வெளியில் பள்ளி நடத்தினால், மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். அப்படி பாதிப்பு ஏற்பட்டால், யார் பொறுப்பேற்பது? நீட் பயிற்சிக்காக நேற்று முன்தினம் வரை 9,842 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று 20 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். நீட் பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Information Minister , 20,000 people applying for NEET exam training informed the Minister
× RELATED மாநகராட்சி எல்லைகள்...