×

கோவையில் ஆன்லைன் பெட்டிங் வாலிபர் தற்கொலை

கோவை: ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த விரக்தியில் தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். கோவை சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மதன்குமார் (28). தனியார் வங்கி ஊழியர். திருமணம் ஆகாத இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக இருந்தார். தனது செல்போன் மற்றும் லேப்டாப்பில் தினமும் இவர் ஆன்லைனில் பெட்டிங் வைத்து சூதாடி வந்துள்ளார். இதில் அதிக அளவு பணம் கிடைத்துள்ளது.
சமீபகாலமாக இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காலத்தில் 3 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் சம்பாதித்துள்ளார்.

தற்போது இதை விட அதிக தொகையை இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலரிடம் இவர் செலவுக்கு கடன் வாங்கியுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் சம்பாதித்து கடனை அடைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இது நடக்கவில்லை. இதனால் விரக்தியில் காணப்பட்ட மதன்குமார் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் பெட்டிங் தீவிரமாக இருப்பதால் அதை தடுக்கும் வகையில் கடும் நடவடிக்கை எடுக்க மாநகர போலீசாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : teenager ,suicide ,Coimbatore , Online betting teenager commits suicide in Coimbatore
× RELATED மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி