×

இந்திரா காந்திக்கு அஞ்சலி

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36வது நினைவு தினம், நாடு முழுவதும் நேற்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 1984ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது 36வது நினைவு தினம் நேற்று  கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ராகுல் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பொய்யில் இருந்து உண்மை வரை... இருளில் இருந்து வெளிச்சம் வரை... மரணம் முதல் வாழ்க்கை வரை... இந்த வார்த்தைகளுடன் வாழ்வதற்கான அர்த்தம் என்ன என்று எனக்கு காட்டியதற்காக நன்றி பாட்டி,’ என கூறியுள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்திரா காந்திக்கு அவருடைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்,’ என கூறியுள்ளார்.

Tags : Indira Gandhi , Tribute to Indira Gandhi
× RELATED டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்