×

இளநிலை பட்ட படிப்புகள் தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு: மீன்வளப் பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்  www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கோ.சுகுமார் இவ்விவரங்களை இணையதளத்தில் www.tnjfu.ac.in வெளியிடுகிறார். இவ்வாண்டு மொத்தமுள்ள 386 இடங்கள் கொண்ட பத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கு இணைய வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு வரும் 7ம்தேதி தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறும். மேலும், பொது கலந்தாய்வானது இந்த ஆண்டு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது.

இணையதள கலந்தாய்வானது வரும் 9ம்தேதி தொடங்கி 11ம்தேதி வரை நடைபெறும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கான இணைய வழி தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்கள் பற்றிய தகவல்களை இன்று முதல் பல்கலைக்கழக இணையதளம் மூலம் அறியலாம். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பல்கலைக்கழக இணைய முகவரியின் மூலமாக விண்ணப்பங்களை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்களை வரும் 27ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விபரங்களை  94426 01908 என்ற செல்போன் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Fisheries University Announcement , Undergraduate Courses Rankings Released Today: Fisheries University Announcement
× RELATED அறுந்து கிடந்த மின்வயரை சரிசெய்ய...