×

வங்கி ஊழியர் குடும்பத்துக்கு ரூ.53.82 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முகப்பேரை சேர்ந்தவர் லட்சுமி (55). வங்கி ஊழியரான இவர், கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியே அதிவேகமாக வந்த பைக், இவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட லட்சுமி படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தனது மனைவியின் இறப்பிற்கு இழப்பீடு கோரி லட்சுமியின் கணவர் சந்திரசேகரன் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.ரேவதி, மனுதாரரின் மனைவி இறப்பிற்கு பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம் என்பது ஆதாரங்கள் மூலம் தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.53.82  லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : bank employee , Rs 53.82 lakh compensation for bank employee's family: Court orders
× RELATED வங்கி ஊழியர் மர்மச்சாவு