×

மர்மமான முறையில் மாடுகள் உயிரிழப்பு

தாம்பரம்: பழைய பெருங்களத்தூர் இந்திரா நகர் 10வது தெருவை சேர்ந்தவர் ஆதிகேசவன் (40). இவர் சொந்தமாக 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த மாடுகள் வீட்டின் அருகேயுள்ள இடத்தில் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 3 மாடுகள் மாயமானது. அவற்றை தேடியபோது, அதே பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுபற்றி பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, யாராவது விஷம் வைத்து கொன்றனரா என விசாரிக்கின்றனர்.

Tags : death , Mysterious death of cows
× RELATED நீலகிரி மாவட்டத்தில் அரசு வழங்கிய இலவச மாடுகள் சாவு