×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: ஐதராபாத் அணிக்கு 121 ரன்களை வெற்றி இலக்காக பெங்களூரு அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 14.1 ஓவர்கள் முடிவில் 121 ரன்கள் 5 விக்கெட்டுகள் இழந்து பெங்களூரு அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.


Tags : IPL ,Hyderabad ,match ,T20I ,Bangalore , IPL 2020: Hyderabad win by 5 wickets against Bangalore in T20 match
× RELATED ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டி:...