×

பொன்னை அருகே 3 ஆண்டுகளாக திறக்கப்படாத விழா மேடை

பொன்னை: பொன்னை அடுத்த வள்ளிமலை பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலும் விவசாய தொழில் செய்கின்றனர். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில்  வருடந்தோறும் மகாபாரதம் நடைபெறுவது வழக்கம். மேலும் மகாபாரதம் நடைபெறும் நாட்களில் இரவு நேரங்களில் கட்டைக்கூத்து நடைபெறுவது வழக்கம். இந்நிலையில்,  இந்தாண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு மேலாக இக்கோயிலில் விழாக்கள் மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது.

தற்போது அரசு பிறப்பித்துள்ள தளர்வுகளில் கோயில் விழாக்கள் சமூக இடைவெளியுடன் நடைபெறலாம் என அறிவித்துள்ளது. எனவே, கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கட்டிமுடிக்கப்பட்டுள்ள  விழா நாடக மேடையை திறக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ponnai , Festival stage unopened for 3 years near Ponnai
× RELATED சீர்காழி அருகே3 மாதம் சம்பளம் வழங்காததால் அரசு பள்ளி ஆசிரியர் தர்ணா