பேரையூர் பகுதியில் மழையில்லாததால் கருகும் மக்காச்சோள பயிர்கள்: விவசாயிகள் வேதனை

பேரையூர்: பேரையூர் பகுதியில் மழையில்லாததால் மக்காச்சோள பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் பேரையூரை சுற்றியுள்ள எஸ்.கீழப்பட்டி, எஸ்.மேலப்பட்டி, சந்தையூர், கான்சாபுரம், லெட்சுமிபுரம், ராவுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்பட்டுள்ளது. யில் இம்முறை மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். மழை இல்லாததால் பயிர்கள் கருகி வருகின்றன. கருகிப்போன பயிர்களை கால்நடைகள் மேய்ந்து வருகின்றன. இதுகுறித்து விவசாயி சந்தையூர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், ‘கடந்த ஆண்டு அமெரிக்கன் படை புழுக்கள் தாக்குதலால் நஷ்டம் ஏற்பட்டது. பயிர் இன்சூரன்ஸ் செய்தும் இதுவரை இழப்பீடு கிடைக்கவில்லை.

மானவாரி மழையை நம்பி இந்தாண்டும் மக்காச்சோளம் பயிரிட்டோம். மழை இல்லாததால் பயிர்கள் கருகி கால்நடைகளுக்கு தீவணமாகி வருகின்றன. இந்த முறை மக்காச்சோள பயிர்களுக்கு காப்பீடு கிடையாது என வேளாண் துறையினர் கூறுகின்றனர். நஷ்டத்தை ஏற்படாத பயிர்களுக்கு காப்பீடு கொடுப்பதால் என்ன பயன். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: