ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!!

சென்னை: நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் நடப்பு பருவத்துக்கான எழுத்து தேர்வு நவம்பர் 26-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், பருவத் தேர்வு அக். 28-ந் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், இணைய தள கோளாறு உள்ளிட்ட பிரச்சனைகளால் குறிப்பிட்ட காலத்துக்குள் பாடங்களை நடத்தி முடிப்பது கடினம் என்றும், பருவத் தேர்வை தள்ளி வைக்கவும் பொறியியல் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று, பருவ தேர்வு நடைபெறும் தேதியை தள்ளிவைத்து திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு பருவத்துக்கான இறுதி வேலை நாள் நவம்பர் 13ம் தேதியுடன் முடிவடையும், நவம்பர் 17 முதல் செய்முறைத் தேர்வுகளும், நவம்பர் 26-ந் தேதி முதல் எழுத்துத் தேர்வு தொடங்கும்.

மேலும், அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது தொடர்பாக உரிய அனுமதி வந்தவுடன் அறிவிப்பு வெளியாகும். இந்த நிலையில், நடப்பு பருவ தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒரு மணிநேரத் தேர்வாக 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இறுதி செமஸ்டர் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் அரியர் தேர்வாக எழுதலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: