×

டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.: அடுத்த வாரம் உயர்மட்டக்குழு ஆலோசனை

டெல்லி: டெல்லியில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து நோயை கட்டுப்படுத்த அடுத்த வாரம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் மேலும் 891 பேருக்கு கொரோனா ஏற்பட்டதால் தொற்றை தடுக்க உயர்மட்டக்குழு ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது பற்றி மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் ஆலோசனையில் கலந்துகொள்ள உள்ளனர்.


Tags : Corona ,Delhi ,consultation , Corona outbreak in Delhi on the rise again
× RELATED கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகம்...