×

பீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது: முதலமைச்சர் நிதிஷ் மீது தேஜஸ்வி பகிரங்க குற்றச்சாட்டு

பாட்னா: பீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதிஷ்குமார் அரசு ஊழல் செய்திருப்பதாக காங்கிரஸ் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும்ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் தலைநகர் பாட்டனாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கல்வி, வேலைவாய்ப்பு, பாசனம் மற்றும் மருத்துவம் இவைகள் தான் பீகாரின் முக்கிய பிரச்சனைகள். இதனை ஒரு போதும் நிதிஷ் குமார் பேச மாட்டார். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்ற நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த காலமே நிலைத்திருக்க நிதிஷ் குமார் விரும்புகிறார்.

பீகாரின் வளர்ச்சி குறித்து, ஜே.பி. நட்டாவுடன் நாங்கள் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். பீகாரில் 30,000 கோடி அளவுக்கு மொத்தம் 60 மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது எனவும் தெரிவித்தார். முன்னதாக டிவிட்டரில் பிரதமர் மோடி பேசிய முந்தைய தேர்தல் பிரச்சாரத்தின் வீடியோ ஒன்றை தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கு முன்பு நிதிஷ் குமார் மீது பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த புதன் கிழமை பிரச்சார கூட்டத்தில் பேசிய மோடி, தேஜஸ்வியை காட்டு தர்பாரின் இளவரசன் என்று வர்ணித்திருந்தார்.

இது பாஜகவின் பொறாமையின் வெளிபாடு என்று காங்கிரஸ் பதிலளித்தது. பீகாரில் 28-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் 3,7-ம் தேதிகள் முறையே 2 மற்றும் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.


Tags : Nitish Kumar ,Tejaswi ,Bihar , Rs 30,000 crore corruption in Bihar: Tejaswi publicly blames Chief Minister Nitish Kumar
× RELATED பீகார் முதல்வர் நிதிஷ்குமார்...